மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !

மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !


தற்பொழுது சமூகத்தில் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு வரும் மாற்றம் நாம் அனைவரும் கண்கூட அறிந்த ஒன்று. இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு துரித உணவங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ஆனால் இன்று மக்கள் இடையே ஆர்கானிக்  மற்றும் இயற்கை என்னும் இமயத்தை  நோக்கி படை எடுத்து உள்ளனர். இதற்கு காரணம் மக்களின் விழிப்பு உணர்வு மற்றும் அறிந்து ஆராயும் குணமும் முக்கியம் ஆகும். எந்த எண்ணிக்கை கூடுமே தவிர குறைய வாய்ப்பு இல்லை, என்னெனில் இது மக்களால், நல்லது எது என்று நன்றாக ஆராய்ந்து, அறிந்து, உணர்ந்து எடுத்த முடிவு ஆகும்.

இது போன்ற நல்ல வாய்ப்பு உள்ள மூலிகை உணவக தொழிலை தொடங்கி, தஞ்சாவூரில் வெற்றிகரமாக நடத்தி வரும் திரு.அன்பழகன் அவர்கள் நமது சிறுதொழில்முனைவோர் .காம் இணைய இதழுக்காக பகிர்ந்து உள்ள செய்திகளை நமது வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்து உள்ளோம்.

தொழில் ஆலோசகர் ஆகிய நான், பல தொழில்களை பற்றி நன்கு அறிவேன், மேலும் எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ள ஓர் தொழிலை தொடங்கி, அந்த தொழில் என் தலைமுறைக்கும் வருமானம் பெற்று தரக்கூடிய ஓர் தொழிலாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் உணவு துறை சார்ந்த இந்த மூலிகை உணவக தொழிலை தேர்வு செய்தேன், இது எப்படி தலை முறைக்கும் வருமானம் தரும்?, தரும் ஏன்னெனில், மனிதனின் அடிப்படை தேவைகளில் மிக மிக முக்கியமானது உணவு, எனவே இது அதிக தேவை உள்ள ஓர் தொழில், மேலும் இன்று அசைவ உணவு விடுதி என்றால் இதை படிக்கும் போதே தங்கள் மனதில் பல பிரபல உணவங்களின் பெயர்கள் தங்கள் மனதில் இந்த நேரம் தோன்றி இருக்கும். அது போல் மூலிகை  உணவு என்ற உடன் எனது உணவதின் பெயரை தங்கள் மனதில் பதித்து விட்டால் (BRANDING) எனது தலைமுறை வருமான கனவு நினைவாகும். இது மிக எளிதாக  முடியும். ஏன்னெனில், இந்த தொழிலில்  இப்பொழுது வரை பெயர் சொல்லும் படி யாரும் இல்லை.

முன்று மதங்களுக்கு முன் தொடங்க பட்ட எனது மூலிகை உணவகத்தில், ஆரம்பத்தில் வியாபாரம் சற்று குறைவாக இருந்தது, இதற்கு காரணம் நம் மக்கள் அதிகம் டீ மற்றும் வடை, போண்டா போன்ற சிற்றுண்டி உணவு பொருட்களை அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆகும், எனவே, எனது உணவகத்தில், பத்துக்கும் மேற்பட மூலிகை டீ, சிற்றுண்டி உணவுகளை சேர்த்து விளம்பரம் செய்தேன். இதன் விளைவு டீ குடிக்க வந்தவர் எல்லாம் நமது உணவகத்தின் உள்ளே உள்ள அட்டைவனையில் உணவகளின் நன்மைகளை பார்த்து , அவர்கள், அவர்களின் நண்பர்களையும் நமது, மூலிகை உணவகத்துக்கு பரிந்துரை செய்தலால் இன்று நல்ல வியாபாராம் நடைபெறுகிறது.

மூலிகை உணவகத்தில் இலாபம் என்று பார்த்தால் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை கிடைக்கும் என்பதில் மாற்றம் இல்லை. மேலும் மூலிகை உணவகம் ஆரம்பிக்க மிக குறைந்த முதலீடு போதும். அதவாது ரூபாய் 50,000 தில், (கடை முன்பணம், உள் அலங்காரம் இல்லாமல்) தொடங்க முடியும். நல்ல மக்கள் தொகை புழக்கம் உள்ள இடத்தில நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூபாய் 4000 வரை வருமானம் பார்க்க முடியும்.

மேலும் ரூபாய் 50,000 முதலீடு செய்து மூலிகை உணவகம் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு, வழிகாட்டவும், பயற்சி அளிக்கவும், தொடர்ந்து மூல பொருட்கள் வழங்கவும் திரு.அன்பழகன் அவர்கள் தயாராக உள்ளார். இதே முதலிட்டில் மேலும் இரண்டு தொழில்கள் செய்ய முடியும் என்கிறார். அதாவது ரூபாய் 50,000 ஆயிரம் கொண்டு மூன்று தொழில் தொடங்க  தொடர்பு கொள்ளவும் :

திரு.அன்பழகன் அவர்கள்
ராஜா வீதி, கரந்தை, தஞ்சாவூர்-613002
போன் : 9344662122, 9751662122

Comments

Post a Comment

Popular posts from this blog

சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி?

தொழில்முனைவோர் பண்புகள் என்றால் என்ன்?

கருப்பட்டி தயாரிப்பது எப்படி