Posts

Showing posts from August, 2017

பேக்கிங் கிளிப் தயாரிப்பு

பேக்கிங் கிளிப் தயாரிப்பு பொருட்களை பேக்கிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று கிளிப்பு ஆகும். இதை தயாரித்து விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். மாதம் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். இந்த கிளிப்புகளை தயாரிப்பதற்கு பிரத்யேக இயந்திரங்கள் உள்ளன. தரமான நிறுவனத்தின் இயந்திரத்தை தொழில் ஆலோசர்களிடம் கேட்டு வாங்க வேண்டும். தரமான இயந்திரத்தை வாங்கி, கிளிப்புகள் தயாரிக்கும் தொழிலை புதிய தொழில் முனைவோர்கள் மேற்கொள்ளலாம். கிளிப் தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டால் மேலேயே சொன்னதுபோல மாதம் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம். எந்த அளவிற்கு அதிகமாக உற்பத்தி செய்கிறோமோ அந்த அளவிற்கு வருமானம் கூடும். இன்றைய நிலையில் ஒரு கிலோ கிளிப் ரூ.50 வரை விற்பனையாகிறது. கிளிப் இயந்திரத்தை இயக்குவது மிகவும் எளிதானது. இயக்குவதற்கு ஒருவரே போதும். இடமும் அதிகம் தேவையில்லை. குறைந்த பட்சம் 10க்கு10 அடி போதுமானது. தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் ஒரு சிறு இடத்தை வாடகைக்கு பிடித்து இந்த இயந்திரத்தை கொண்டு தொழில் நடத்த முடியும். கிளிப் இயந்திரம் ச

கருப்பட்டி தயாரிப்பது எப்படி

கருப்பட்டி தயாரிப்பது எப்படி கருப்பட்டி கட்டமைப்பு உற்பத்தி செலவு தயாரிக்கும் முறை பனங்கற்கண்டு விற்பனை வாய்ப்பு மருத்துவ குணம் கருப்பட்டி கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. பனங்கருப்பட்டியில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. உடல்நலனுக்கு உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. மூலப்பொருட்கள் பனை பதநீர், சுக்கு, மிளகு, திப்பிலி. கட்டமைப்பு பதநீர் காய்ச்ச, கருப்பட்டி பாகு அச்சில் ஊற்ற ஒரு அறை. உலர வைக்க, பேக்கிங் செய்ய மற்றொரு அறை. மூலதனச் செலவு:  கட்டிட அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். கொப்பரை அல்லது அலுமினிய பாத்திரம் 4 கிலோ அளவுள்ளது ரூ.600, அச்சுப்பலகை 6 அடி நீளம்  ரூ2000, உலர வைக்க 20 தட்டுக்கூடை ரூ1500, துடுப்பு, கரண்டி ரூ200, பேக்கிங் செய்ய எடை மெஷின் ரூ500 என கட்டமைப்புக்கு ரூ24,800 தேவை. உற்பத்தி செலவு தினசரி 100 கிலோ சுக்கு கருப்பட்டி தயாரிக்க 750 லிட

சத்து மாவு தயாரிப்பு

சத்து மாவு தயாரிப்பு தயாரிக்கும் முறை பயன்கள் உற்பத்தி செலவு வருவாய் சந்தை வாய்ப்பு பப்ஸ், பீசா போன்ற மேற்கத்திய உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். குழந்தைகளுக்கு இந்த உணவுகளை பழக்குவதால் அவர்களின் உடல்நலம் கெடும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவுகளுக்கு மாற்றாக இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து  சத்துமாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே சத்துமாவு தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் தயாரிக்கும் முறை தேவையான பொருட்கள் ராகி 2 கிலோ (ரூ.34), சோளம் 2 கிலோ (ரூ.40), கம்பு 2 கிலோ (ரூ.32), பாசிப்பயறு அரை கிலோ (ரூ.28), கொள்ளு அரை கிலோ (ரூ.10), மக்காசோளம் 2 கிலோ(ரூ.28), பொட்டுக்கடலை ஒரு கிலோ (ரூ.70), சோயா ஒரு கிலோ (ரூ.58), தினை அரை கிலோ (ரூ.18), கருப்பு உளுந்து அரை கிலோ (ரூ.30), சம்பா கோதுமை அரை கிலோ (ரூ.30), பார்லி அரை கிலோ (ரூ.30), நிலக்கடலை அரை கிலோ (ரூ.40), அவல் அரை கிலோ (ரூ.40), ஜவ்வரிசி அரை கிலோ (ரூ.25), வெள்ளை எள் 100

சணல் பொருள் தயாரிப்பு

சணல் பொருள் தயாரிப்பு சணல் பொருட்கள் உற்பத்தி செலவு வருவாய் சந்தை வாய்ப்பு உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும் முறை முதலீடு சணல் பொருட்கள் ‘சணல் மூலம் ஆரம்பத்தில் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் போன்றவை சணலைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் இருப்பதால் பலர் விரும்பி வாங்குகின்றனர். எனவே சணல் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த தயாரிப்புக்கு மாவட்ட நிர்வாகமும், மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகின்றன. கண்காட்சியில் இலவசமாக இடம் அளிக்கின்றனர். அரசின் கல்லூரி, அரசு அலுவலகங்களில் கண்காட்சி நடத்தி ஆர்டர் பெறலாம்.  தென்னை, வாழை நார் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் வேறு. ஆனால் சணல் தனித்துவம் வாய்ந்தது. திடமே இதன் சிறப்பு. பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம். இதில் நல்ல வளர்ச்சி உள்ளது. சணல் பொருட்களுக்கான சந்தை விரிந்து கிடக

செயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பு

செயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பு செயற்கை ரோஸ் பொக்கே தயாரிக்கும் முறை கட்டமைப்பு தேவைப்படும் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் வருவாய் (மாதத்துக்கு) செயற்கை ரோஸ் பொக்கே இயற்கையான பூக்களால் தயாரிக்கப்படும் பொக்கேக்களின் ஆயுள், சில நாட்களில் முடிந்து விடுகிறது. நிரந்தரமாக வீட்டை அலங்கரிக்கும் வகையில் தயாரிக்கப்படும் செயற்கை பூ பொக்கேக்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேக்களை தயாரித்து விற்பது லாபகரமானது செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேயை யார் வேண்டுமானாலும் எளிதாக தயாரிக்கலாம். காதலர் தினம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இவற்றை அதிகம் பயன்படுத்துவதால் நல்ல கிராக்கி உள்ளது. காதல் ஜோடிகள் சிவப்பு ரோஜா, நெருங்கிய நண்பர்கள் பிங்க் ரோஜா பொக்கேக்களை அதிகம் வாங்குகின்றனர். அந்த தினங்களுக்கு ஏற்ப தயாரித்து விற்கலாம். பெண்கள் வீட்டில் இருந்தவாறே ஓய்வு நேரங்களில் செய்வதற்கு ஏற்ற தொழில் இது. வீட்டிலுள்ள பெண்கள் கூட்டாக சேர்ந்து ஒருவர் பூ தயாரித்து, மற்றொருவர் கோன் தயாரித்து, இன்னொருவர் பொக்கேவை முழுமைப்படுத்தினால் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் செய்ய

பெண் தொழில்முனைவோர்களுக்கு சிறப்புக் கடன்கள்

பெண் தொழில்முனைவோர்களுக்கு சாதகமான பல வகையான கடன் திட்டங்கள் உள்ளன. அவர்களுக்கு பல வங்கிகளில் சிறப்பு கடன் திட்டங்களும் உள்ளன. வட்டி சலுகை பெண் தொழில்முனைவோர்கள் இதுபோன்ற சிறப்புத் திட்டங்களில் கடன் பெறும்போது வட்டி சலுகை கிடைக்கும். பொதுவான தொழில்கடன்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு 0.25 சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை வட்டியில் சலுகை கிடைக்கும். உதாரணத்துக்கு ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் எஸ்எம்இ பிரிவில் ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான கடனுக்கு 10.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதே வங்கியில் பொதுப்பிரிவினருக்கு 11.95 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. பெண்கள் வாங்கும் கடனுக்கு 1.25 சதவீதம் வட்டி குறைவாகும். அதேபோல எஸ்பிஐ வங்கியில் பெண் தொழில்முனைவோர்கள், 2 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கும் கடனுக்கு 0.50 சதவீதம் வட்டி சலுகை வழங்கப்படுகிறது. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பெண் தொழில்முனைவோர்கள் வாங்கும் கடனுக்கு பரிசீலனை கட்டணம் கிடையாது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ. 5 லட்சத்துக்கு மேல் வாங்கும் ஒவ்வொரு லட்ச ரூபாய் கடனுக்கும் 25

மாவட்ட சிறுதொழில் மையம் (SIDCO)

யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சம் 5 லட்சம், சேவை தொழிலுக்கு 3 லட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். வங்கிகள் வணிக வங்கிகள், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் கல்வித்தகுதி குறைந்த பட்சம் 8ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தியான தனி நபர் விண்ணப்பிக்கலாம். வயது தகுதி - பொதுப்பிரிவினர் 35; சிறப்பு பிரிவு, எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் படை வீரர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் - 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் மற்றும் மானியம் ஆண்டு வருவாய் 1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பில் 10 சதவீதம், சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் பங்களிப்பு செலுத்த வேண்டும். கடன் தொகையில் தமிழக அரசு 15 சதவீதம் மானியம் வழங்குகிறது. கடன் திட்

வீட்டுத் தோட்டத்தில் பூண்டுச் செடியை வளர்க்கும் வழிகள்

வீட்டுத் தோட்டத்தில் பூண்டுச் செடியை வளர்க்கும் வழிகள் பண வீக்கம் அதிகரிக்கும் இந்த சூழலில் காய்கறிகளின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றன. இதை சரிக்கட்ட சமையலுக்கு தேவையான பொருட்களை நாம் ஒரு வீட்டுத் தோட்டம் அமைத்து பயனடையலாம். சிறிது முயற்சி எடுத்தால் போதும் அதை மிகவும் சிறப்பாகவும், அழகாகவும் வளர்க்க பராமரிக்கச் செய்ய முடியும். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் நாம் புதிய காய்கறிகளை இதன் மூலம் பெற முடியும். உங்களின் அக்கறை கொண்டு மிகவும் கவனமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள் நிச்சயம் சுவைக்காமல் போகாது. இப்போது புதிதாக காய்த்த காய்கறிகளை நாம் வாங்கி சமைக்க முடிவதில்லை. இத்தகைய முயற்சி நமது ஆரோக்கியத்தையும் பணத்தையும் சேமிக்கும் வண்ணம் அமைகின்றது. சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்க சிறது முயற்சி தேவைபடுகின்றது. தற்போதைய நவீன கால சூழலில் பெரிய தோட்டத்தை அமைப்பது கடினம் தான். ஆனால் நிச்சயம் சில செடிகளை நடுவதற்கும் வைப்பதற்கும் வெளியில் இடம் இருக்கும். உங்கள் பால்கனியில் செடிகளை வளர்ப்பது அழகாகவும் மதிப்பூட்டுவதாகவும் அமையும். அதற்கு சில எளிய வழிகளை கொண்டு நாம் வ

ஊதுவத்தி தயாரிப்பு

Image
அறிமுகம் ஊதுவத்தி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும். ஊதுவத்தி வகைகள் ஊதுவத்திகளில் அகர்பத்தி சந்தனவத்தி மட்டிப்பால் வத்தி மல்லிகைப்பூவத்தி தாழம்பூ வத்தி ரோஸ்வத்தி என்று பல விதமான மணம் கமழும் வத்திகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் செய்யும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும் பொருள்கள் தான் வேறு. அடிப்படையான பொருள் வழவழப்பான பலகை ஊதுவத்தி தயாரிக்க முக்கியமாக வழவழப்பான மணை(பலகை) தேவை. சிமார் 60 செ.மீ நீளமும் 30 செ.மீ. அகலமும் உள்ள பலகை மீது வைத்துதான் ஊதுவத்திகள் தயரிக்கப்படுகின்றன. மூங்கில் குச்சிகள் சுமார் 15 செ.மீ முதல் 25 செ. மீ நீளம் வரை இருக்கும் மூங்கில் குச்சிகள் தேவை இவைகள் தயாரிப்புப் பொருள்கள் விற்கும் கடைகளிலேயே கிடைக்கும். இவை எல்லா வகையான ஊதுவத்தி தயாரிப்புக்கும் அடிப்படைத் தேவையாகும். 1. சந்தன வத்தி. தேவையான பொருள்கள் சந்தன பவுடர் – 500கிராம் சாம்பிராணி – 500கிரம் வெட்டிவேர் – 200கிராம் கிச்சிலிக் கிழங்குப் பொடி – 100 கிராம் புனுகு – 2 கிராம் கஸாதூரி – 2 கிராம் பன்னீர் – 100மில்லி செயல் முறை வெட்டிவேர் கிச்சிலிக்

நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ?

நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ? தொழில்.. நாம்  தொழில் தொடங்குவதற்கு முன் நம் மனதில்  பல தொழில்கள்  இருக்கும் . அதை நாம்  சந்தை ஆய்வு செய்தோ அல்லது சந்தையில் உள்ள அதிகப்பட்ச தேவையின் அடிப்படையிலோ தேர்தெடுத்து வைத்திருப்போம் .    இதிலிருந்து நமக்கு பொருத்தமான தொழிலை  தேர்தெடுப்பதில் நமக்கு  மிகுந்த  குழப்பம் இருக்கும்  .நமக்கு தகுந்தாற் போல் சரியான தொழிலை தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் வழிமுறைகள் பயன்படும் . 1.தொழில்களை  பட்டியலிடுங்கள் : – நம் மனதில் பு துப்  புது  தொழில்கள் தோன்றிக்  கொண்டே  இருக்கும். நம் மனதில் தோன்றிய தொழில்களை முதலில் பட்டியலிட (List )வேண்டும். தொழில்களை ஒரு தாளிலோ அல்லது கணினியிலோ வரிசையாக பட்டியலிடுங்கள் .   சந்தை ஆய்வு(Market Survey) அல்லது சந்தையில் உள்ள  தேவையின்(Market Demand) அடிப்படையிலோ இந்த தொழில்ப்பட்டியலை தயார் செய்ய வேண்டும். 2.தகுதி(Competence) மற்றும் சந்தையில் தேவைகளை (Market Demand) பொருத்திப் பாருங்கள் :   பல தொழில்களுக்கு சந்தையில் தேவை நிறைய இருக்கும் .நீங்கள் பட்டியலிட்ட தொழில்களில் அதிகபட்ச சந்தை தேவையுள்ள (Huge

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான 12 விதிகள்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான 12 விதிகள் நீங்கள் தொடங்கவிருக்கும் தொழில் மீது உங்களுக்கு தீவிர காதல் இல்லையெற்றாலும், அது உங்கள் மனதை ஆட்டிபடைக்கவில்லையெற்றாலும் அந்த தொழிலை தொடங்காதீர்கள். நாம் செய்ய இருக்கும் விசயத்தின் மீது காதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். உங்கள்  தொழில் எதிர்மறையாக செல்லும்பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் எண்ணம் இருந்தால் உங்கள்  தொழிலின் மீது உங்களுக்கு காதல் இல்லை அர்த்தம். உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புபவர்களையே வேலைக்கு தேர்ந்தெடுங்கள். உங்கள் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டபோகிறது, எப்படி விற்பனை செய்ய போகிறீர்கள் என்பதை தெரிந்து வைத்துகொள்ளுங்கள். உங்கள் திறமைகளை தெரிந்து வைத்துகொள்ளுங்கள். அந்த திறமைகளை உயர்த்துவதற்கு கவனம் செலுத்துங்கள். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உள்ளது, உங்கள் ஊழியர்களுக்கு  நிறுவனத்தில் வேலை பார்ப்பது பிடிக்குமானால்,  நேரத்தை எப்படி பயனுள்ளதாய்  செலவழிப்பது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். விரு ப்பம் இல்லாத ஊழியர்கள் நேரத்தை வீணாக்கிவிடுவார்கள். திறந்த அலுவலக இடத்தை அமைத்திடுங்கள், அப்போதுதான் ஒ

About GST

ஆப் உருவாக்க பயிற்சி

மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்பை எளிதாக்கிய   “ஹசுரா” இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறி வருகின்றனர். ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பதே நாம் அதிகமாக கேட்கக் கூடிய பதிலாய் இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் தற்போதைய மார்கெட் தேவைக்கும், மாணவர்கள் படித்ததற்கும் உள்ள இடைவெளியே ஆகும்.இந்த இடைவெளியை பூர்த்தி செய்ய தோன்றியதே imad.tech. இந்த வலைத்தளம்  ’ஹசுரா’ என்னும் app building நிறுவனத்தின் ஒரு தொடக்கம் ஆகும். இந்த தளம், ஐஐடி மெட்ராசுடன் இணைந்து ஆப்ஸ் உருவாகுதளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சியை அளித்து வருகிறது. “இந்த பயிற்சியை தோற்றிவித்ததர்க்கான முக்கியக் காரணம், படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்கள், பயிற்சி இல்லாமல் பணியில் சேரும் அளவிற்கு இதில் தேர்ச்சி உள்ளவர்களாய் இல்லை என்பதே,” என்கிறார் நிறுவனத்தின் இணை நிறுவனர், ரஜோஷி.  இந்த இலவச ஆண்லைன் பயிற்சி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே ஹசுராவின் imad-க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறத