சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி?

சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி?


 SSI – Small Scale Industries ( சிறு தொழில் மையம் ) :

இவைகளின் அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி என அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களிலும் இருக்கிறது.

SSI பயன்கள்:..

இவற்றில் உங்களது நிறுவனத்தை பதிவு செய்து கொள்ள மிக வேண்டியது அவசியம். ஏனெனில்,

  1. உங்களது நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு துவங்கவும்.
  2. மானியம் பெறுவதர்க்கும்.
  3. குறைந்த வட்டியில் கடன் பெற உதவும்.
  4. வரி சலுகை  பெற உதவும்.
  5. மின்சார கட்டணத்தில் சலுகை  பெற உதவும்.
  6. மதிய மாநில அரசுககளின் சலுகை மற்றும் முன்னுரிமை பெற உதவும்.
சரி, வாருங்கள் சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி ? என்பதை பற்றி பார்ப்போம்.

இவற்றில்ப திவு செய்வதற்கு முதலில் இதன் இணையதளமான http://udyogaadhaar.gov.in/UA/UAM_Registration.aspx   என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.
கீழ்கண்டவாறு ஒரு விண்டோவ் ஒப்பன் ஆகும்.
 
இதில் உங்கள் ஆதர் கார்ட் நம்பர் மற்றும் உங்கள் பெயர் குடுதல் உங்கள் மொபைல்க்கு வரும். பிறகு Application farm open  ஆகும். அதில் பின் வரும் விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த விவரங்களை நிரப்பினாள் தங்களின் சான்றிதழ் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு வரும்.

அதற்கு ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், வங்கியின் `ஐஎஃப்எஸ்சி கோடு’ மற்றும் மின்னஞ்சல் முகவரி முக்கியம். கட்டணம் எதுவும் இல்லை. இதில் ஒருமுறை பதிவு செய்துவிட்டால் திருத்தங்கள் செய்ய முடியாது என்பதால், தேவையான விவரங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு நிதானத்துடன் பதிவு செய்யவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின், அதற்கான சான்றை (அக்னாலெட்ஜ்மென்ட்) பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். அதில் யாருடைய கையெழுத்தும், ஒப்புதலும் தேவையில்லை. தொழில்முனைவோரின் முதலீட்டு தொகைக்கு ஏற்றபடி குறு, சிறு, நடுத்தர தொழிலா என்பதை அக்னாலெட்ஜ்மென்டில் தெரிந்து கொள்ளலாம். இதில் இரண்டு வகையான பதிவுகள் உண்டு. அவை… உற்பத்தித் தொழில் பதிவு, சேவை தொழில் பதிவு.

உற்பத்தி தொழில் பதிவுக்கு…
1. குறு தொழில் உற்பத்தி தொழில்முனைவோர் (micro):  தொழில் உபகரணங்களுக்கு 25 லட்சம்  ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்.
2. சிறு தொழில் உற்பத்தி தொழில்முனைவோர் (small):  தொழில் உபகரணங்களுக்கு 5 கோடி   ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்
3. நடுத்தர தொழில்  உற்பத்தி  தொழில்முனைவோர் (medium): தொழில் உபகரணங்களுக்கு 10 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்
சேவை தொழில் பதிவுக்கு…
1. குறு தொழில் சேவை தொழில்முனைவோர் (micro):  தொழில் உபகரணங்களுக்கு 10 லட்சம்  ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்
2. சிறு தொழில் சேவை தொழில்முனைவோர் (small): தொழில் உபகரணங்களுக்கு 2 கோடி  ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்
3. நடுத்தர தொழில் சேவை தொழில்முனைவோர் (medium): தொழில் உபகரணங்களுக்கு 5 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்
தொழில் பதிவின் பலன்கள்!
UAM-ல் பதிவு செய்து  அதற்கான சான்றைப் பெற்றவர்கள், கீழ்க்காணும் பலன்களைப் பெற முடியும். இது ஒரு நிரந்தர பதிவு ஆகும்
தொழில்முனைவோர்கள் மத்திய, மாநில அரசு நடத்தும் தொழிற்பயிற்சி மற்றும் விழாக்களில் கலந்துகொள்ளலாம்.
தொழிலை விரிவுபடுத்த வங்கிக்கடன் பெறும்போதும் இதைச் சமர்ப்பிப்பது கூடுதல் பலமாக இருக்கும்.
உற்பத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்களுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு பெறவும். மத்திய, மாநில அரசுகளின் மானியங்களைப் பெறவும் இந்த பதிவு மிகவும் அவசியம்.

Comments

  1. பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  2. மூலிகை நாப்கின் தயாரிக்க விரும்புகிறேன். அதற்குரிய வழிகாட்டுதல்களை வழங்கமுடியுமா அய்யா

    ReplyDelete
  3. மூலிகை சூரனங்கல் தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும்

    ReplyDelete
  4. நான் செங்கல் சூளை ஆரம்பிக்க இருக்கிறேன் இதற்கு எப்படி license வாங்குவது தயவுசெய்து சொல்லுங்கள்

    ReplyDelete
  5. மூலிகை தைலம் தயாரித்து விற்பனை செய்ய விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தொழில்முனைவோர் பண்புகள் என்றால் என்ன்?

கருப்பட்டி தயாரிப்பது எப்படி