உலகத்திலேயே இந்தியாவில்தான் ஜிஎஸ்டி அதிகம்… எப்படி தெரியுமா?

உலகத்திலேயே இந்தியாவில்தான் ஜிஎஸ்டி அதிகம்… எப்படி தெரியுமா?

டெல்லி: உலகில் உள்ள 140 நாடுகளில் இந்தியாவில்தான் GSTஜிஎஸ்டி வரி அதிகம் வசூலிக்கப்படுகிறது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் ஜிஎஸ்டி 13 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை அமல்படுத்தப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் 20 சதவிகிதம் அமல்படுத்தப்படுகிறது. பிரிட்டனில் 20 சதவிகிதமும், நியூசிலாந்து நாட்டில் 15 சதவிகிதமும், மலேசியாவில் 6 சதவிகிதமும், சிங்கப்பூரில் 7 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒரே தேசம், ஒரே வரி என்ற குறிக்கோளுடன் ஜூன் 30 நள்ளிரவு முதல் ஜிஎஸ்டிவரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் 0% என்னும் வரி விகிதத்தின் கீழ், உணவுப் பொருட்கள், கல்வி, மற்றும் மருத்துவ சேவைகளுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
5%, 12%, 18%, 28% என்னும் நான்கு விகிதங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் ஹோட்டல் பில் உயர்ந்து விட்டது என்றும் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டதாகவும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. சில மாதங்கள் சென்ற பிறகுதான் இதன் விளைவுகள் தெரியவரும். உலகின் பிற நாடுகளில் ஜி.எஸ்.டி ஏற்படுத்திய மாற்றங்களை தெரிந்து கொள்வோம்.
பிரான்ஸ்: உலகிலேயே ஜிஎஸ்டி வரி முறையை அறிமுகப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் தான். கடந்த 1954ஆம் ஆண்டிலேயே பிரான்ஸில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகப்படியான விற்பனை வரி, மோசடி மற்றும் கடத்தலை ஊக்குவிக்கும் கட்டணங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் 20% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 1970 முதல் 80 ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது.
பிரேசில் - கனடா: பிரேசில் நாட்டில் ஜிஎஸ்டி 4 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. கனடா நாட்டில் ஜிஎஸ்டி 13 முதல் 15 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுகிறது. கனடாவில் கடந்த 1991ல் ஜி.எஸ்.டி அறிமுகமானது. மாநில ஜி.எஸ்.டி மற்றும் மத்திய ஜி.எஸ்.டி. என்று இந்தியாவில் உள்ளது போன்று இருவேறு மாடல்களில் ஜி.எஸ்.டி அறிமுகமானது.
இரண்டு வித வரி: மாநில ஜி.எஸ்.டி அல்லது மத்திய ஜி.எஸ்.டி ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றும்படி மாகாணங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டது. எனினும் மூன்று மாகாணங்கள் இது தொடர்பாக கனடா அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா ஜிஎஸ்டியை அறிமுகம் செய்த 2 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகப் பழைய மாகாண விற்பனை வரிக்கே மீண்டும் மாறியது.
நியூசிலாந்து நியூசிலாந்து நாட்டில் கடந்த 1986ஆம் ஆண்டு 10 சதவிகித வரியுடன் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், 1989ஆம் ஆண்டில் 12.5 சதவிகிதமாகவும், 2010ஆம் ஆண்டில் 15 சதவிகிதமாகவும் இந்த வரி உயர்த்தப்பட்டது. வரி முறைகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்காக இந்த வரி ஏற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் விளக்கம் அளித்தது.
சீனா: சீனாவில் வணிக வரி முறையை மாற்றி வாட் வரி அமைப்பைக் கடந்த 2016ஆம் ஆண்டு சீனா கொண்டு வந்தது. வாட் வரி முறை மூலம் அந்நாட்டின் கட்டுமானத்துறை பாதிக்கப்பட்டது. சீனாவில், ஒரு சில பொருட்களுக்குப் பகுதி ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது.
ஜப்பான்: ஜப்பானில் கடந்த 1989ஆம் ஆண்டு 3 சதவிகித அளவுடன் நுகர்வோர் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1997ல் இந்த அளவு 5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் மந்த நிலைக்குச் சென்றது. பின்னர் 2012ஆம் ஆண்டில் அந்நாட்டு நாடாளுமன்றமான டையட் வரியை 10 சதவிகிதமாக உயர்த்தியது. பின்னர் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரியை உயர்த்துவது தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டில் வரி உயர்த்துவதை 2019ஆம் ஆண்டு அக்டோபர் வரை தள்ளி வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் கடந்த 2000ஆவது ஆண்டு ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக 10 சதவிகித வரி விதிக்கப்பட்டது. அதேவேளையில், உணவு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு ஜீரோ வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்த ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம்: ஜிஎஸ்டி வரி இந்தியாவில்தான் அதிகம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. பல அத்தியவாசியப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 5%, 12%, 18%, 28% என்னும் நான்கு விகிதங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியினால் இந்திய பெருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள் இன்னும் சில மாதங்களில் தெரியவரும்.

Comments

Popular posts from this blog

சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி?

தொழில்முனைவோர் பண்புகள் என்றால் என்ன்?

கருப்பட்டி தயாரிப்பது எப்படி