கருப்பட்டி தயாரிப்பது எப்படி கருப்பட்டி கட்டமைப்பு உற்பத்தி செலவு தயாரிக்கும் முறை பனங்கற்கண்டு விற்பனை வாய்ப்பு மருத்துவ குணம் கருப்பட்டி கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. பனங்கருப்பட்டியில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. உடல்நலனுக்கு உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. மூலப்பொருட்கள் பனை பதநீர், சுக்கு, மிளகு, திப்பிலி. கட்டமைப்பு பதநீர் காய்ச்ச, கருப்பட்டி பாகு அச்சில் ஊற்ற ஒரு அறை. உலர வைக்க, பேக்கிங் செய்ய மற்றொரு அறை. மூலதனச் செலவு: கட்டிட அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். கொப்பரை அல்லது அலுமினிய பாத்திரம் 4 கிலோ அளவுள்ளது ரூ.600, அச்சுப்பலகை 6 அடி நீளம் ரூ2000, உலர வைக்க 20 தட்டுக்கூடை ரூ1500, துடுப்பு, கரண்டி ரூ200, பேக்கிங் செய்ய எடை மெஷின் ரூ500 என கட்டமைப்புக்கு ரூ24,800 தேவை. உற்பத்தி செலவு தினசரி 100 கிலோ சுக்கு கருப்பட்டி தயாரிக்க 750 லிட
Comments
Post a Comment